சசிகலா விஸ்வநாதன்/பழமையும் புதுமையும்

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
புதன்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு

தன்முனைக் கவிதை சரம்

போக்கியவை போகட்டும்;
நீ!
புதியவையை கை
கொட்டி வரவிடு!

புதியவை பயனுள்ளதா
எனப் பாரு!
பழையனவை பயனுள்ளதா
என்றும் பாரு!

பயனுள்ள பழமையை
என்றும் போற்று!
பயனற்ற புதுமையை
நீ வெறு.

பழயதை பழுதென
நீ தூற்றாதே!
புதியதை மயங்கியே
நீ ஏற்காதே.

பழமையைக் கண்
மூடி தள்ளாதே!
புதுமையை மனம்
மூடி கொள்ளாதே!

புதுமையும்
பழமையும்
கலந்து இரு!
புதுமையில் புதிதாகவும்,
பழமையில் பழமையாகவும்.

புத்தம் புதிதாக
சிறாரன்ன மலர்,
பழமையின் பழமையாக
மெய்யை உணர்.

சசிகலா விஸ்வநாதன்
17-1-2024
.



.