என்பா

அழகியசிங்கர்

நண்பர்களுடன் பழகும்போது
ஜாக்கிரதையாக
இருக்கவேண்டும்
அனேகமாய் பேசாமலயே
இருக்கப் பழகவேண்டும்
எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினால் போதும்
ஒன்றும் ஆகப்போவதில்லை இதனால்