
சொல்புதிது இணையக்கால கவியரங்கம்- 93
கவிப் பறவை !
என்னுள் உதிர்த்த சொற்கள்
எறும்புக் கூட்டம்போல்
அணி வகுத்து நின்றன
என் மனத் தூரிகையால்
வரைந்த கவி ஓவியம்!
என் மனக்கொடியில்
உதித்த கவி மலர்கள்
மன இருள் சூழும்போது
கவி ஒளியாய்
என்னை வந்து ஆட்கொண்டது!
மனம் ஒடிந்து
வீழும்போது
சிறகுகள் முளைத்த
கவிப்பறவையாய்
சுதந்திரமாய் வானில்
வட்டமிட்டுப் பறந்தேன்
கவிப் பறவையாக!
