சுரேஷ் ராஜகோபால்/நீரோடை

சொல் புதிது, இணைய கால, 93வது கவி அரங்கம், தேதி 19.01 2024 கிழமை வெள்ளி, நேரம் மாலை 05.25 “நீரோடை” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

மேற்கே சிறுகுன்றில் தோன்றி
ஓடி வருகுதே நீரோடை
லேசான சத்தம் தெளிந்த நீரோட்டம்
தன்பாதையில் சிரிப்புடன் போகுது. 1

நடுவே நீரலைகள் மின்னுதே,
அழகான நீரோட்டம் கூட்டமாக மீனோட்டம்
சில குறும்புக்கார மீன்கள்
துள்ளிக் குதித்து போகுது. 2

பக்கத்து ஊரில் இருக்கும்
ஆற்றில் கலக்கும் வரை
இதன் பெயர் ஓடை பின்னே
ஆறோட பெயரே நிலைத்துவிடும். 3


சிட்லபாக்கம்
19 01 2024 மாலை 05.25