
இந்த
இடத்திற்கு
வருவது சற்று
சிரமமாக இருக்கிறது
வீட்டிற்குக் கிளம்பும்போது
வயது அதிகமாகிவிட்டது
என்று தெரிகிறது
எதிர்பார்த்த
அளவிற்குப் பலன்
கிடைக்கவில்லை
ஆனால்
எளிதில் விடமுடியவில்லை
தூக்கமுடியாத புத்தகங்களைத் தூக்கிக்
கொண்டு வரும்
கட்டுக்களைப் பார்த்து
மனைவி பயப்படுகிறாள்
இவருக்கு
என்ன ஆயிற்றென்று..
