ஆர்க்கே/புத்தகக் கண்காட்சி 2024!

இணைய வழி கவியரங்கம் எண் 94

புத்தகக் கண்காட்சி
இந்த வருடம்
நாளையுடன்
“இன்றே கடைசியாகும்!”

தின்பண்டங்கள், பொம்மைகள்,
ஜோல்னாப் பைகள், சமையலறை உபகரணங்கள்
விற்பனைச் சிறுகடைகள்
கடந்து
கண்காட்சிக்குள் வந்தால்
நூற்றுக்கணக்கான
படைப்பாளிகள்
அவரவர் நூல்கள் மூலம்
பேசக் காத்திருத்திருக்கிறார்கள்.
சில வாசகர்கள்
வாங்குகிறார்கள்.
சில வாசகர்கள்
கடந்து போகிறார்கள்.
நிறைய சந்திப்புகள்
நிறைய நண்பர்கள்
நிறைய குழுப்படங்கள்.
இன்னும் வாங்கவும்
வாசிக்கவும்
ஏராளமாக நிறைந்து கிடக்கிறது
புத்தகங்கள்
கண்காட்சி அரங்கிற்குள்ளும்
கண்காட்சி அரங்க
வாயிலின்
நடைபாதைக் கடைகளிலும்!

One Comment on “ஆர்க்கே/புத்தகக் கண்காட்சி 2024!”

Comments are closed.