அழகியசிங்கர்/புத்தகக் காட்சி 4

என்னமோ
தெரியவில்லை
நான்
மோர் சாதம்
சாப்பிடும்போது
ஈ…ஈ..ஈ…ஈஈஈஈ
புத்தகக் காட்சி
சாப்பாடு கூடத்தில்

நேற்று
மதியம் இரண்டு மணிக்கு
ஈ எங்கே வந்தது
துரத்து துரத்தென்று
துரத்துகிறேன்

திரும்பத் திரும்ப
வருகிறது

எப்படியோ நேற்று
ஈ யிலிருந்து
தப்பி ஓடிவிட்டேன்

இன்று
திரும்பவும் சாப்பாடு
கூடத்திற்கு
வந்து விட்டது
ஈ ஈ ஈ ஈ ஈ…