
நேற்றோடு
புத்தகக் காட்சி
முடிந்து விட்டது
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
எல்லாம் முடிந்து விட்டது
காலையில்
எழுந்தவுடன்
புத்தகம் கட்டியிருக்கும்
அட்டைப் பெட்டிகளை
எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்
இனிமேல் புத்தகங்களைப்
படிக்கத் தொடங்க
வேண்டும்
ஆனால் புத்தகத்தை
எடுத்தவுடன்
தூக்கம் கண்ணைச்
சுழற்றிக்கொண்டு
வருகிறது
கூப்பிடவில்லை
தானாகவே
வருகிறது

You’re one of the few honest ones who admits the reality!!