சசிகலா விஸ்வநாதன்/மனதில் ஒரு கோயில்

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
திங்கட்கிழமை
இணைய கால கவியரங்கம்
மாலை மணி 5.15
கவிதையின் தலைப்பு

அழகியசிங்கரின் என்பா சரமாக

பூசலார் கட்டினார்
மனக் கோயில்

செப்புக் காசு செலவு இல்லாமல்;

யார் அறிந்தார்
அதை அவரின்றி;

அவன் அறிந்தான் அன்றோ!

அவன் அறிந்ததாலன்றோ அவனியும் அறிந்தது!

இன்று நாமும் ஆக்கினோம் கோயில்

ஒன்று; பால ராமனுக்கு
அயோத்தியில்

குறை ஒன்றுமில்லை, நமக்கு.

அவனுக்கு ஒரு மனக்கோயில் கட்டி,

அவனை தினமும் அகலாது வாழ்த்தி,

வாழ்வின் துணையாக கொள்வோம்; என்றும்

கொள்ளை இன்பம் நமக்கு.

இருமை நீக்கும் சூரிய மைந்தனை;

இம்மையில் மங்கலம் பலவும் பெற்று,

செம்மையாய் வீடு பேறும் பெற;

சேவித்து அடி பணிவோம்.


22-1-2024