எஸ்ஸார்சி/அயோத்தி

இணைய கால கவியரங்கம் 96

அயோத்தி ராமர் கோவில்
திறப்பு
பிரதமர் மோடி
அக்னி தீர்த்தத்தில் மூழ்கியதும்
புண்ணிய தீர்த்தக் கிணறுகளில் வாளிகொண்டு
நீர் சேந்தித் தலையில்
கொட்டிக்கொண்டதும்
திருவரங்கத்து ஆனை
ஆண்டாளின் தும்பிக்கையை
வருடிக் கொடுத்ததும்
சாதாரண மனிதனாய்
பிரதமரைக் காட்டியது
உலகுக்கு .
அதுவே ஓர் அதிசயமாய்
ஆனந்தமாய் பிரமிப்பாய்
சுயநலம் அற்ற மாமனிதரை
அடையாளம் காட்டியது எனக்கு.
ஆயிரம் விமரிசனம்
எப்போதும் உண்டுதான்
அது வேறு இது வேறு.

One Comment on “எஸ்ஸார்சி/அயோத்தி”

Comments are closed.