
96வது இணையகாலக் கவியரங்கம்
பிரியத்தை வெளிக்காட்ட ஏதேதோ செய்கிறார்கள்
விதம்விதமாய் பரிசுகள்
வித்தியாசமாய் புகைப்படங்கள்
ஆர்ப்பாட்ட ஆரவாரங்கள்
பலரும் பார்க்க முத்தங்கள்
இறுக்கமாய் அணைப்புகள்
நீயின்றி நானில்லை என பொதுவெளியில்
காதல் குழைத்தப் பேச்சுகள்
எல்லோரும் பார்க்க
எல்லாமும் செய்து விட்டு
ஏதோவொரு மனப்புழுக்கத்தின்
தகிப்பில் அனல் கக்கும் வார்த்தைகளை
உமிழ்ந்தபடி பிரிந்து விட்டதாய்
எல்லோரும் பார்க்க
அறிவிக்கிறார்கள்
மாதங்கள் வருடங்கள் கடக்கையில்
புதியதோர் பிரியத்தை வெகு புதிதாய்
மீண்டும்
எல்லோரும் பார்க்க அறிவிக்கிறார்கள்
ஆயிரங்காலத்துப் பயிரின் வேர்கள்
நசியத் துவங்கும் காலமிது
.

ஆயிரம் காலத்து பயிரின் வேர்களை பாதுகாப்போம்