
சொல் புதிது, இணைய கால, 96வது கவி அரங்கம், தேதி 22.01 2024 கிழமை திங்கள், நேரம் மாலை 05.40 “தொடரும் பயணம் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
கரும் இரவில்
நிலவும் வரவில்லை
தட்டுத் தடுமாறி
முன்னேறினான் 1
குத்து மதிப்பாகப்
பாதையைக் கணித்துவிட்டு
இடறி விழுந்து .
தளர்வுடனே பயணம். 2
சட்டென மின்சாரம்
வந்தவுடன் ஒளிவெள்ளம்
நிம்மதி பெருமூச்சு
பயணம் தொடர்ந்தது. 3
தொடரும் பயணம்
வெளிச்சம் கிடைத்தவுடன்
வேகமாக நடந்து
பயணமே முடிந்தது, மகிழ்ச்சி. 4
சிட்லபாக்கம்
22 01 2024 மாலை 05.40
