
96 ஆவது இணைய காலக் கவியரங்கம்
குழந்தையின் கைப்பற்றி
கடைத்தெரு சென்றேன்!
காணும் காட்சி யெல்லாம்
விழியகட்டி விந்தை யுடன்
வினாடிக்கொரு வினாவுடன்
வியப்புடன் குழந்தை மனம்!
விண்ணளவு பயம்
வேதனை சலிப்பு
விதண்டாவாதம் சச்சரவு
வீண் சண்டை வெட்டிப் பேச்சு
அச்ச மாமமலையாய் நான்!
இரண்டு நேர் துருவங்கள்
இரண்டு பார்வைகள்
இரண்டு கோணங்கள்
எதிர்மறை எண்ணங்களை
எடுத்தெறிந்து எழுச்சியுடன்
குழந்தையாக மாறி
குதூகலத் தொற்று வியாதி
உள்ளத்தில் ஒட்டிக் கொள்ள
எனது அனுபவப் பழங்களை
மனக் கூடையில் சேகரித்து
பொதியாகச் சுமந்து கொண்டு
தொடர்ந்தேன் பயணத்தை
எனது புதிய குரு கண்ணனுடன்!
இனிமை எளிமை புதுமை
எங்கும் இன்பமே!
