அழகியசிங்கர்/ஒரு வேனில் செல்லும்போது…

ஒரு வேனில்
நண்பர்களுடன் செல்லும்போது
யார் யாரோ பேசுகிறோம்
யார் யாரோ கேட்கிறோம்
வேன் நின்று நின்று
போய்க்
கொண்டிருக்கிறது

அதெல்லாம்
சரி
இங்கே கவிதை
எங்கே இருக்கிறது?

கவிதை
வேனுடன் ஓடிக்
கொண்டிருக்கிறது

நானும் நீங்களும்
நினைத்தாலும்
பிடிக்க
முடியாது