சசிகலா விஸ்வநாதன்/இதுதான் காதலா?

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
செவ்வாய்க்கிழமை
மாலை மணி 5.15
அழகிய சிங்கரின் என்பா சரமாக
கவிதையின் தலைப்பு


நினையாத நாளில்
அறியாத நாழிகையில்

புரியாத மொழியில்
கூறிவிட்டாய் நீ;

திடுக்கிட்டு, நான்
திகைப்பை விலக்கி

நாணம் கொண்டு நானும்‌.

நாணம் கொண்ட
என் கண்ணை,

நேர் கொண்டு நீ பார்த்து;

என்ன தேடினாய்?
தேடிய பொருள்

கிடைத்ததா;உனக்கு என்னிடம்?

என் கண்ணில் கண்டதை நீ

விண்டுரைப்பாய் என நானும்; நான்

விளம்பிடுவேனென
நீயும்; நீண்ட பொழுது

காத்திருந்தோம்; பொழுதுதான் போனது.

போன பொழுதை பொத்தி வைத்தேன்.

நினைவில், இன்பமாய், இன்று வரை;

திளைக்கிறேன்; இன்னும் புரியவில்லை;என்

கண்ணில் என்ன பார்த்தாய்?

உன் கண் சிரித்ததை, நான்

புரிந்து கொண்டேன்.
புரிந்து கொண்டாய்;

நீயும்,என் மனதின் மலர்வை,

இதுதான் காதல் என்பதோ?

இன்றுவரை உன்
கண் பார்த்து

நானும்; என் கண் பார்த்து

நீயும்; காணும் பிழை இன்றி

கருத்துப் பிழையும் இன்றி,

சேர்ந்து வாழ்தலின் சுவை அறிந்து;

அவரவர் போக்கின் புரிதலை காத்து;

மதித்து நடக்கும் கலை தெளிந்து;

நம் தேறல் நன்றே.


23-1-2024