
97 ஆவது இணைய காலக் கவியரங்கம்
கனவுகளை எடுத்து
அடுக்கி வைக்கிறேன்
மனப் பேழைக்குள்!
சில கனவுகள் மட்டும்
குறும்புக் குழந்தைகளாய்
எட்டி எட்டிப் பார்க்கின்றன!
குதித்து உல்லாசமாக
வெளியே வருகின்றன!
ஆர்ப்பரிக்கும் கடலின்
அலைகளாக ஓடி வந்து
கரையைத் தொட்டுத்
திரும்பிச் செல்கின்றன!
மனிதரின் கால்களைத்
தொட்டு வருடிச் சென்ற
இன்பத் துள்ளலுடன்
உள்ளே சென்று
ஒளிந்து கொள்கின்றன!
ஒரு நாள் இன்பமும்
பல நாள் துள்ளல்களும் தருகின்ற கனவுகள்
இன்ப நினைவுகளை
அசை போடும் மனதிற்கு
குதூகலக் குழந்தைகளே!
