நாகேந்திர பாரதி/நடந்ததும் நடப்பதும்

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 97

கடனாகக் கொடுப்பது
திருப்பிக் கேட்பது

கொடையாகக் கொடுப்பது
மறந்து போவது

கொடுத்ததே தெரியாமல்
கொடுத்து விட்டது

பார்த்தது மட்டும் தான்
அப்போது நடந்தது

பறிபோன தெல்லாமே
பிற்பாடு தெரிந்தது

இப்போது நடப்பது
எல்லாமே புதியது

முப்போதும் நினைவிலே
மூழ்கிக் கிடப்பது

எப்போது கிடைப்பது
இன்பத்தில் கிடப்பது

———————–