இராஜாமணி/ஊடகக் காரன் வரைந்த ஓவியம்

97 வது விருட்சம் கவியரங்கம்.


தொடர் மழை,
தொடர்ந்து பெருவெள்ளம். ஓய்வில்லாமல் செய்தி சேகரித்து சோர்வாக
மூன்று நாள் கழித்து வீட்டுக்கு வந்தான்.
மழையையும் வெள்ளத்தையும் ஓவியமாக வரைந்து குழந்தைக்கு காட்டினான் .

மழையில் நனைந்து நடுங்கும் முதியவரின் படமும் இருந்தது .

செல்ல மகள் ஓவியத்தை பார்த்து ,

” அப்பா! நீ ரொம்ப மோசம் அந்த தாத்தாவுக்கு ஒரு மழைக்கோட்டு வரைய வில்லையே ” என்றாள்.

.

One Comment on “இராஜாமணி/ஊடகக் காரன் வரைந்த ஓவியம்”

Comments are closed.