
வயது முதிர்வு காலத்தில்
வாழ்க்கையின் நம்முடைய தவறுகள்
நமக்குத் தெரிகிறது
கொஞ்சமாகப் புரிகிறது. 1
நாம் செய்யும் தவறுகளை
நம் சந்ததி செய்யாது பார்க்கிறோம். 2
ஆனால் அவர்கள்
தயங்காமல் தொடர்ந்து அதையே செய்கிறார்
தவறான பாதையில் அவர்கள் பயணம். 3
காலம் கடந்த
நமது உபதேசம்
விழலாகப் போகிறது. 4
நம் நியாயங்கள் நீர்த்து
கொஞ்சம் கொஞ்சமாக வறண்டு போகும்
நீர்த்தும் போகும்.
