கலைச் செல்வி

அப்படியொன்றுமில்லை
ஆனால் நல்லது


இந்த முறை வந்த கனவு கொஞ்சம் புதியதாக இருந்தது.

கனவில் நிறைய இடங்களில்
ஒன்றுமே பேசாமல்
நான் நின்று கொண்டிருக்கிறேன் இல்லாது போக நடந்து கொண்டிருக்கிறேன்
அவ்வளவுதான்.

ஏன் பேசவில்லை.? என்கிறார்கள்
பேசினால் தான் என்ன.?
என்கிறார்கள்
பேசிவிடு என்கிற குரல் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது

ஒன்று மட்டும் எனக்குத் தோன்றுகிறது
பேசினால்
தீர்ந்துவிடுகிற அளவுதானா வாழ்வு.?
இல்லை தானே ..?

பின் பேசாமல் இருப்பது
சமயங்களில் நிம்மதி தான்.


24.1.2024