ஹரணி/சொடுக்குக் கதைகள்

000
பிண ஊர்வலம் கிளம்பிய பின்னரும் நிறுத்தவில்லை. ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.

000

மருத்துவ மனையில் பார்க்கப் போன நோயாளி இறந்து போனார். வாங்கிய பழங்களைப் பக்கத்து நோயாளியிடம் கொடுக்க வாங்கிக் கொண்டார்.

000

நடைப்பயிற்சி போனவன் அருகே வெடித்தது நிறுத்தி யிருந்த சைக்கிள் டயர்.

000

எல்லோரும் பசியுடன் சாப்பிட உட்கார்ந்தார்கள். ஓடிவந்த குழந்தை நின்று பார்த்துப் பின் நிதானமாக உச்சா போக ஆரம்பித்தது.

000

சுற்றும் முற்றும் பார்த்தபடியே வந்து நின்று தயங்கிய படியே கேட்டான் சார் ஒரு போஸ்ட் கார்டு கொடுங்க.

000