குமரன்/சொடுக்குக்கதைகள்

1) வீட்டு வேலை முடித்தவுடன் சம்பளம் கேட்டாள் . உன் பருஷன் டாஸ்மாக்குக்கு கொடுக்கவா என்றாள் முதலாளியம்மா.

2) என்னடி, தொன்னூறு “மார்க்” தான் வாங்கியிருக்கே, மிச்ச பத்து எங்கே என்ற ஆசிரியையிடம் பத்து தேய்த்து வாங்கிய இந்த மார்க்கே பெரிய விஷயம் என்று சொல்ல நினைத்தாள் செல்லி.

3) கோயிலுக்குள் அன்னதானம். வரிசையில் நின்ற யாரும் ஏழைகளில்லை.

4) வங்கி காசாளர் நூறு நாள் வேலை பணத்தை கொடுத்து கொண்டிருந்தார். அடுத்து என்று கூப்பிட்ட போது கூண்டுக்குள் கையை நீட்டிய பெண்ணின் கைகளில் தங்க வளையல்கள். பஞ்சாயத்து தலைவரின் மனைவியாம்.

5) சமரசம் உலாவும் இடமான அந்த டாஸ்மாக்கில் மேல் நிலை, கடைநிலை ஊழியர்களும் அடுத்தடுத்து வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.

6) டாஸ்மாக்கில் நிறைய விற்பனையானால்தானே மக்களுக்கு பொங்கல் காசு கொடுக்க முடியும் என்று மேடையில் முழங்கி கொண்டிருந்தார் ஒரு அரசியல்வாதி