எங்கள் பகுதியில்

யாழினி முனுசாமி

எங்கள் பகுதியில் நேற்று இரவிலிருந்து மின்சாரம் இல்லை. எங்கள் வீட்டிற்கு அருகில் , தெருவின் கடைசியில் உள்ள விளையாட்டுத் திடல் மழைநீர்சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
எங்கள் தெருவில் மழைநீர் தேங்கவில்லை. அதனால் வீட்டில் மழை நீர் வர வாய்ப்பில்லை. ஆனால் சுவரில் சில இடங்களில் ஓதும் கண்டு மழைநீர் கசிகிறது. வீட்டிற்குள் மழை நீர் புகுந்து மக்கள் படும் துயரத்தையெல்லாம் பார்க்கும்போது இது ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.

மழைநீரோடு சாக்கடைக் கால்வாய் நீரும் கலந்து கருப்புநீராக எங்கும் பரந்திருக்கிறது.

மின்தடையைச் சீர்செய்வதற்குத் தண்ணீர் வடிந்தால்தான் முடியும் என்கின்றனர் மின்சார அலுவலகத்தில். அவர்களும் என்னதான் செய்வார்கள்?

இன்று காலையிலிருந்து மனம் சோர்வாகிவிட்டது. மின்சாரம் இல்லாவிட்டால்தான் எவ்வளவு சிரமமாகி விடுகிறது இந்த வாழ்க்கை?
காலையில் இரண்டு தண்ணீர் கேனுக்கு அவ்வளவு சிரமப்பட வேண்டியதாகிவிட்டது!

இப்போதைக்கு மழை ஓய்ந்தால் போதுமென்றிருக்கிறது.

பாதுகாப்பாக இருங்கள் நண்பர்களே!