கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
ஒரு மழைக்காலம்
திரும்புகிறபோது கூடவே
அரும்புகின்றன சில அற்புதங்கள்
கால்கள் இல்லாத
அழகான அட்டைப்பூச்சி
கடுகளவுக் கால்களைக் கொண்டே
தத்தி நகரும் தவளைக்குஞ்சு
ஈராயிரம் கால்களைக் கொண்டு
இந்நிலத்தை அளவிடும்
வண்ணம் குன்றாத மரவட்டை
எப்போதோ மரித்துப்போன
காய்ந்த கனுவில் ஒருளிரும்
சின்னதான பச்சையம்
வறண்ட குழியாய்தூர்ந்து போன
கொல்லைக் கிணற்றில்
கொப்பளிக்கும் சின்னஞ்சிறு சுனைகள்
ஏரிகளை உடைத்து
தார்சாலையில் வெளியேறும்
தண்ணீரின் நடுவே
இடைவிடாமல் துள்ளும் மீன்குஞ்சுகள்
இன்னும்
இன்னும்
உண்டு
நான்தான்
இந்த மழையைப் பாடும்
உயிர் நண்டு
நவ 8, 2021 மாலை 5:09

🦚👌