புவனா சந்திரசேகரன்/சொடுக்கு கதைகள்

  1. மின்கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் நிற்கும் போது வேர்த்துக் கொட்டியது. மின் விசிறி ஓடுகிறதா என்று நிமிர்ந்து பார்த்தால், அங்கே பவர்கட் என்று பேசிக் கொண்டார்கள்.
  2. தமிழ் வளர்ச்சித் துறையின் புதிய அமைச்சர் ஒரு மணி நேரம் உரையாற்றினார். “தமில் வால்க” என்று மீண்டும் மீண்டும் அவர் வாழ்த்திய போது தமிழ் நன்றாக இனி வளரும் என்றே தோன்றியது.
  3. “தினம் தினம் உப்புமாவா? ” தட்டைத் தள்ளி விட்டு வேகமாக எழுந்த கண்ணன், ஹோட்டலுக்குப் போனான். ” என்ன இருக்கு? ” என்ற கேள்விக்கு, ” எல்லாம் தீந்துபோச்சு ஸார். உப்புமா தான் இருக்கு” என்ற பதில் கிடைத்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. உப்புமாவிற்கான பில்லுடன் ஆட்டோ சார்ஜும் சேர்ந்து கொண்டது.