விஜயலக்ஷ்மி கண்ணன்/உறவுகள்

நான் இன்று வாசித்த கவிதை
98வது இணைய கால கவியரங்கம்.

கயிறு இல்லா கட்டு உறவுகளும் பந்துக்களும்.
கை காசை காட்டின் வந்து ஒட்டிக்கொள்ளும்உறவுகளும் உண்டு.

வயிறு குலுங்க சிரித்து கொண்டே
கதற வைக்கும் விஷமிகளையும் காணலாம்.

இடர் வந்த போது ஆறுதல் கூறியவர்,
படார் என முகத்தை திருப்பியவர்கள், இரண்டும் எதிர் நோக்கி பயணிக்கும் ரயில் போல.

கண்ணாடி போல உள்ளதை உள்ளபடி காட்டினாலும், உறவு விரிசல் பட்டால் உடைந்த கண்ணாடி போல கிழித்து விடுமே!

உறவுகள் இதமா னவை தான்
இதம் மாறாமல் இருக்க பூப்போல
கையாள வேண்டும் என்பதே!

நொறுங்காமல்,,
கிழியாமல், குத்தாமல், கொதறாமல் வருடி, உறவுகளைக் கொண்டாட முடியும்.

24.01.2024
மாலை 5 மணி 58 நிமிடங்கள்