நாகேந்திர பாரதி/முப்பொழுதும் கற்பனையில்

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 98


எப்பொழுது எழுந்தேன்
எப்பொழுது குளித்தேன்
எப்பொழுது சாப்பிட்டேன்
எப்பொழுது படுத்தேன்

அனிச்சைச் செயலாக
அத்தனையும் நடக்கையிலே
இச்சைச் செயலாக
இருப்பவை இவைதான்

உந்தன் திரு முகம் தான்
உந்தன் தேன் மொழி தான்
உந்தன் விரல் தொடல் தான்
உந்தன் மடி விழல் தான்

முப்பொழுதும் கற்பனையில்
மூழ்கிக் கிடப்பதனால்
இப்படியே கவிதைகள் தான்
எப்படியோ வாழ்க்கை தான்

———-