அழகியசிங்கர்/விற்காத புத்தகங்கள் ஒரு கேள்விக்குறி..

நான் கையில்
வைத்திருப்பது விற்காத
புத்தகங்கள்.
அது ஒரு கேள்விக்குறி.

ஒவ்வொரு
ஆண்டும் புத்தகங்களை
உருவாக்கிக்
கொண்டிருக்கிறேன்
இதோ
இந்த வருடம் ஏழு
புத்தகங்கள்

11.02.2020 ல் விற்க
தி.நகரில் உள்ள
கடையில் கொடுத்தேன்
இதோ
திருப்பி வாங்கிக்
கொண்டு வந்து விட்டேன்
2024 ஆம் ஆண்டில்

கட்டுக்குலையாமல்
புத்தகங்கள்
இருப்பதாகப்
படுகிறது

புத்தகம் தயாரிப்பது
நமக்குப் பெருமை
விற்றால் இன்னும் பெருமை

விற்க முடியாத
புத்தகங்களை
விற்றுக்
கொண்டிருக்கிறேன்