
சொல்புதிது இணையக்கால கவியரங்கம் – 98
அன்பு
எல்லாப் பரிசுகளையும்
ஏற்றுக் கொள்கிறது
குண்டூசியைக்கூட..
அன்பு
எல்லாக் கடிதங்களையும்
படித்து ரசிக்கிறது
சோகமாக இருந்தால்கூட.
அன்பு
எல்லாத் துன்பங்களையும்
தாங்கிக் கொள்கிறது
மரணத்தின் பிடியில்கூட
அன்பு
எல்லாக் கவிதைளையும்
படித்து மகிழ்கிறது
கண்ணீர் கவிதையைக்கூட
அன்பு
பனித் துளிகளை
கண்டு மகிழ்கிறது
கண்ணீர் துளிகளைக்கூட
அன்பு
எல்லாக் கண்களையும்
கருணையுடன் பார்க்கிறது
குருடாக இருந்தால்கூட
அன்பு
எல்லா உயிரையும்
தன்னுயிர்போல நினைக்கிறது
சிற்றெறும்பைக்கூட.
பள்ளிக்கரணை, சென்னை
