நாகேந்திர பாரதி/காத்திருக்கும் கனவுகள்

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் -99


————-
கண்மாய்க் கரையிலும்
வயலின் வரப்பிலும்
கோயில் பிரகாரத்திலும்
பஸ் ஸ்டாண்ட் டீக்கடையிலும்

சிதறி விழுந்தன
சில கனவுகள்
சில நினைத்தபோது சிதறியவை
சில பேசியபோது சிதறியவை

சில தொலைந்து போகலாம்
சில அலைந்து திரியலாம்
சில காத்துக் கிடக்கலாம்

எப்போதாவது ஒரு நாள்
மறுபடியும் அவ்விடத்தில்
காத்துக் கிடப்பதைக்
காணும் சந்தர்ப்பத்தில்

சில கண்ணீர் விடலாம்
சில சிரித்து மகிழலாம்

———————-