மனத்துக்கண் மாசிலாது
உடலும்
உடல் தரித்த மேலாடையும் கூடச்
சுத்தமானதாய்
ஒரு
படையலுக்கான
உணவுப் பொருள் போல்
தூய்மையாய்
நடந்து வந்து கொண்டிருந்தாய் நீ
தங்கள் பக்கம்
இணங்க வைக்க இயலாது
தோற்றுப் போனவன்கூட
வணங்கித் தான்
நெருங்க வேண்டி வந்தது உன்னை
பகைவனுக்கும்
அருளியது உன்
நன்னெஞ்சு
பிறிதொரு நாள்
மூப்பில் மரித்திருக்க வேண்டிய உன்னை
ஒரு போதும்
இறவாதிருக்கச் செய்ய மட்டுமே
பயன்பட்டது
அந்தக் குறுக்கீடு
அடுத்தடுத்த தலைமுறைகளை
விழிப்போடு இருக்க
எச்சரித்து விடைபெற்றது உன் மூச்சு.

மிக்க அருமை
அருமை
அருமை. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நன்றி🙏💕
ஆசை இல்லாத மனசு!
சத்தியம்.
சத்திய சோதனைக்குள்
களம் கண்டபோது
உணர்ந்தேன்!
இரயில் பயணத்தில் அறிந்தேன்.
சுயநலம் இல்லாத மனிதர்!
கொடுமுடி KBS வீட்டுக்கு வந்தபோது
புரிந்தது பேராசையில்லாத வீரனென்று
மிக மிக அழகாக நேர்த்தியாக காந்தீயத்தையும் காந்தியையும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. முன்னாள் தலைவர்கள் எல்லோரும் சுயநலவாதிகளைப்போல, நாட்டின் மேல் அக்கறையில்லாதவர்கள் என்ற பிம்பத்தை செவ்வனே சித்தரிக்கும் கும்பல் வெற்றிகரமாக செயல் படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நாளில் மட்டுமல்லாமல் காந்தியை என்றும் மனதில் இருத்தல் வேண்டும்

சிறப்பு !
உண்மை !
இந்துத்துவா கொன்றது மகாத்மாவை…….
ஆனால் மத நல்லிணக்க உணர்வை கிளர்தெழச் செய்து
ஜீவிக்கச் செய்துள்ளது !
Super