
கடமை உணர்த்தும்
கர்த்தனாய் இரு;
சங்கை நீங்கிய
சமர்த்தனாய் இரு;
பொய்மை நீத்த
மெய்யனாய் இரு;
மும்மலம் களைந்தவனாய் இரு.
🌺
முற்றுக் கதிராய் வணங்கி இரு.
பற்று விட்ட பரமனாய் இரு.
முக்தனாய் இரு.
சக்தியாய் இரு.
வல்லவனான
நல்லவனாய் இரு.
🌺
நேர்மையானவனாய் இரு.
கூர்மையானவனாய் இரு.
வாய்மையானவனய் இரு.
தாய்மையானவனாய் இரு.
ஒரஞ்சாராதவனாய் இரு.
மாண்புடையவனாய்
இரு.
நேர்கொண்ட பார்வையானவனாய் இரு.
🌺
சொல்லும் சொல்லில் திடமாய் இரு.
செய்யும் செயலில் செம்மையாய் இரு.
மண்ணில் நல்ல புண்ணியனாய் இரு.
மகாத்மா ஆகாவிடினும்
மனிதனாயிரு.
சசிகலா விஸ்வநாதன்
30-1-2024
( இன்று தேச பிதாவான மகாத்மாகாந்தியின் நினைவுநாள் …
நினைவில் நிறுத்துவோம் அவர் போதனைகளை )
