கலைச்செல்வி/நேற்றைப் போல இன்னொன்று வேண்டாம்


கொஞ்சம் நடக்க வேண்டும் போலிருந்தது
நடந்து நடந்து அது இரண்டு கிலோமீட்டர் அதிகமாகிவிட்டது.

இரண்டு கிலோமீட்டர் என்பது கண்ணிலிருந்து கொஞ்சம் தூரம்தான்
மற்றபடி மனசிலிருந்து பக்கமாய்த்தான் இருக்கவேண்டும்

இப்போதெல்லாம் அடிக்கடி நீ கவலைப்படுகிறாய் எனக்கும் உனக்கும் இடையில் அதிக தூரம் ஆகிவிட்டது என்றும்
நீ நிறைய அமைதி ஆகிவிடுகிறாய் என்றும்

ஒன்று சொல்கிறேன் கேள்

அமைதி என்பது சதா கொதிப்பது தான்
புத்தனிலும்
எப்போதாவது நீ சொல்கிற என்னிலும்


31.1.2024
தாராபுரம்