மீனாக்ஷி பாலகணேஷ்/புத்தகக் கண்காட்சி

மெனக்கெட்டுப் போய்வந்தேன்….
புத்தகங்களின் மீதுள்ள ஆசையாலா?
நண்பர்களுடன் அளவளாவும் விருப்பாலா?
மொழியாக்கங்கள் மீது நீண்டநாட்களாக இருக்கும்
இணையற்ற பற்றாலா?
தெரியவில்லை; ஆனால்

மக்களைத் திரளாகக் கண்டதும் உள்ளம் சிலிர்த்தது
ஆசை ஆசையாக வாசிக்கிறார்களே என்று!

நண்பர்களுடன் அளவளாவி நட்பு இன்னும் செழித்தது
அவர்களும் இலக்கிய விரும்பிகளே என்று!

மொழியாக்கங்களைக் கைநிறைய அள்ளிக்கொண்டதும்
நாம் பாரதத்தையே கைநிறைய அள்ளி எடுத்து
அறியப்போகிறோம் என்று ஆனந்தம் கொண்டது
அடியேன் நெஞ்சம். உங்களுக்கு எப்படி?