செ.புனிதஜோதி கவிதை

யாருமற்ற
ஒற்றையடிபாதையின்
ஓவியத்தைக் கண்ணுற்றேன்
என் கால்கள்
நடக்க ஆரம்பித்தன
எதுவரை என்றோ?
எப்படி திரும்புவேன்
என்றோ தெரியவில்லை?
காட்சி கண்ணில்
இருக்கும் வரை
ஒரு கவிதையைப்போல்
நடை பயின்று வந்துவிடுவேன்.