(முகநூல் பதிவு)
நா. விச்வநாதன்
தமிழில் என்ன இருக்கு? என்ற கேள்வி
யை அடிக்கடிக் கேட்டுக்கொண்டிருந்தார்
மௌனி.சிறுகதைத் திருமூலர் என்ற
அடைமொழியை அளித்த புதுமைப்பித்
தன்கூட மௌனியிடம் பயந்து போயிரு
ந்தார்.என் செய்திகளை எழுத தமிழ்மொ
ழி போதுமானதாயில்லை.நான் செல்லும்
உயரத்திற்கு என் தமிழ்மொழியால் வரமு
டியவில்லை என்ற மௌனியின்கூற்று
சாரமற்றது என்று யாரும் சொல்ல முன்
வரவில்லை.எம்.வி.வி யும் கு.அழகிரிசா
மியும் மட்டுமே லேசாக எதிர்ப்புக் குரல்
எழுப்பினர்.அவரது அந்த இருபத்திநான்
கு கதைகள் தமிழில் உச்சம் தொட்டவை.
இதுவரை கண்டிராத மயக்கும் மொழி
நடை,இருண்மையழகு,முரண்கள் இவற்
றைக் கையாண்டவிதம் அற்புதமானது.
மௌனிக்கு எதிலும் போதாமை இருந்த
து.பாரதியின் பாஞ்சாலி சபதம் வெறும்
ஆவேசத்தில் எழுதப்பட்டது.இலக்கியக்
கூறுகள் இல்லை என்பார்.புதுமைப்பித்
தனைக்கேட்டால் உதட்டைப் பிதுக்குவார்.
லா.ச.ராவின்ஒருகதையைக்கூடவாசிக்க
முடியாது அலுப்பு.பொருளற்ற வெற்று
வார்த்தைகள்.கழைக்கூத்தாடி வேலை.
லா.ச.ரா தன் கனவில் சங்கீதம் கேட்ப
தாகச் சொல்கிறார்.அபத்தம்.அந்தச்சங்
கீதச் சத்தம் எனக்கு ஆபாசமாக இருக்கு.
நான் சப்தம் பற்றிக் கொண்டிருந்த கருத்
திற்கு உகந்ததாக இல்லை.இவர்களுக்
கெல்லாக் தான் சுத்த சுயம்புவாக ஆகா
யத்திலிருந்து கீழே குதித்துப் பூமியைக்
கீறி வெளிவந்த தந்தை-தாய் அவதாரங்
களாகத் தம்மைப்பற்றிய கணிப்பு.முன்
னோடிகளையும் காணச் சகிப்பதில்லை.
பின்னோடிகளையும் காணப் பிடிப்பதில்
லை.இது ஒருவகை அசூயை என்பார்.
மௌனியைத் தன் மானசீகக் குருவாக
ஏற்றிருந்தார் ஜெயகாந்தன்.மௌனியின்
“மாறுதல்”கதையை வாசித்துவிட்டுத்தா
ன் நான் எழுதவே ஆரம்பிப்பேன் என்பார்.
மௌனியோ ஜெயகாந்தனின் கதைக
ளப் பற்றிக் கருத்து கேட்டபோது அவரு
டைய எந்தக் கதையும் மனதில் நிற்கவே
இல்லை என்று அதிரவைத்தாராம்.
தி.ஜானகிராமனுக்கு செக்ஸ் பற்றியத்
தாழ்வு மனப்பான்மை. அரைகுறை ஞா
னம்.அதை வைத்து ஏதோ ஒப்பேற்றிக்
கொண்டிருக்கிறான்.ஒருத்தரைப்பிடித்து
விட்டால் அவர் செய்வது எல்லாமே பிர
மாதம் என்ற மந்தை மனோபாவம் உதவா
து என்று சிரிப்பார்.சுந்தரராமசாமியைப்
பற்றிக் கூறும்போது கெட்டிக்காரர் என்று
பதிலளிப்பார்.ஆனால் his cleverness kills
the art.சுந்தரராமசாமிக்கு இதுதான் நேர்
ந்தது.இது விபத்துமாதிரி.இப்படி சக எழு
த்தாளர்களைப்பற்றிய மோசமான மதிப்
பீடுகளை வெகு அலட்சியமாக வெளியி
யிடுவார்.பாராட்டுவதில் எக்கச்சக்கமான
கஞ்சத்தனம் மௌனியிடம் இருந்தது.
தன் எழுத்து எல்லா எழுத்துக்களையும்
விட மேம்பட்டது என்ற அறிவிப்பாகக்கூட
இருக்கலாம்.கு.ப.ராஜகோபாலன்,ந.பிச்ச
மூர்த்தி இருவரும் கும்பகோணத்திலிரு
ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த
னர்.இவர்களைவிடத்தன்னால் சிறப்பாக
எழுத முடியும் என்று நிரூபிக்க அந்த இரு
பத்திநான்கு கதைகளையும் ஒரேமாதத்தி
ல் எழுதியதாக க.நா.சு சொல்வார்.உண்
பையில் அந்தக் கதைகள் உலகத்தரத்துக்
கு ஏற்றவை.மௌனி மேதைதான் என்று
அறிவித்தவை.
இப்படியும் ஓர் எழுத்தாளர் நிஜமாக
வே இருக்கிறாரா என்று சந்தேகப்பட்
டு ஈழத்திலிருந்து சிதம்பரம் வந்து
எழுத்து அபிமானிகள் சிலர்
மௌனியைப்பார்த்துவிட்டுச் சென்
றதாகச் செய்தியுண்டு.மௌனி புதிர்
அல்ல வெளிச்சமானவர் என்று அவ
ரைப் பிரார்த்தனை செய்ய ஒரு கோ
ஷ்டியும் இருந்தது.
மௌனியும் அபரிமிதமான புகழ்ச்சுமை
யைத் தன் முதுகில் ஏற்றிக்கொள்ள
விரும்பினார்.மௌனியின் பலமும்
பலவீனமும் இதுதான்.காதல்-மரணம்
என்ற இரண்டைச்சுற்றித்தான் அவரது
கதைகள் சுழன்றன.எழுத்து என்பது தா
னாகவே பிறக்காது.என் மனதின்வார்த்
தைச்சேகரத்திலிருந்து எடுத்து ஒவ்வொ
ன்றாய்த் தக்க இடத்தில் பொருத்துவது
என் வேலை.சிறுகதை ஏற்கெனவே என்
னுள் ஓடிக்கொண்டிருக்கிறது.காதல், பகி
ர்தல்தான்.அது பரவசமானது. மரணம்
ஒரு வாதையான அனுபவம்.அனுபவித்து
த்தீரவேண்டியதுதான்.இவற்றை வேறு
வேறு வார்த்தைகளில் மீண்டும் மீண்டும்
எழுதினார்.இவற்றை விஸ்தாரமாகச்
சொல்வதே என்வேலை என்றார்.
மௌனி யின் கதையுலகம் சிக்கலான
தன்று.சிக்கலான விஷயங்களை உள்ள
டக்கியது..ஒருவித மாயத்தன்மையானது,
சிறுகதை இலக்கணங்களுக்கு உட்படா
தது.மனம் சார்ந்தது.பூடகமானது.
அழியாச்சுடர்,பிரபஞ்சகானம்,தவறு. ,ஏன்
என்று உச்சம் தொடும் கதைகள். இவர்
கதைகளுக்கும் தலைப்பு வைக்கும் பழக்
கமில்லாதவர்.எம்விவிதான் வைத்ததாக
தகவல் உண்டு.காலத்தைப் பிடித்து நிறு
த்திக் காதலுடன் தழுவினாலும் அது நகர்
ந்து கொண்டேதான் இருக்கும்.ஆனாலு
ம் அவன் பிரிந்த நேரம் அப்படியே இருக்
கும்.நிலைத்து நின்றுவிடும் என்பார் பிர
பஞ்சகானத்தில். கு.அழகிரிசாமி,மௌனி
குழப்பமான அபிப்ராயங்களை வாசகர்
தலையில் சாதுர்யமாகக் கட்டிவிட்டு உட்
கார்ந்து ஓய்வெடுக்கிறார் என்பார்.வாச
கனுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்
ளும்படியான பம்மாத்து’ வேலை சரியான
தல்ல என்பது கு.அழகிரிசாமியின் கருத்
து.மௌனியை ஆராதித்தும் எதிர்த்தும்
இருவேறு கோஷங்கள் எழுந்தன.அக
உணர்வை மீட்பது அதை வெளிக்கொண
ர்வது என்பது சிக்கலானதுதான்.கதை
களில் கொண்டுவரும்போது அதீத அழ
கோடும் சிலநேரம் இருண்மையோடும்
இருக்கட்டும் என்றே விரும்பினார்.
மௌனி யின் குழப்பமான மனநிலை
பல்வேறு மீறல்களைச் செய்ய வைத்
தனது.மது பாட்டில் அவரிடம் எப்போதும்
இருக்கும்.விலைமகளிர் சகவாசமும்
உண்டு.அபின் இஷ்டமான வஸ்து.
பௌத்த தத்துவ விவாதங்கள்,
தரும விசாரணை என்பனவற்றிலும்
கவனம் செலுத்தினார்.என் கதைகளி
லேயே நான் உச்சத்தைத் தொட்டுவிட்
டேன் என்று தன்னையே கொண்டாடிக்
கொண்டார்.தமிழுலகம் இவரைப்பற்றிப்
பேச ஆரம்பித்தபோது இவரும் நிறையப்
பேசினார்.ஆட்கள் இல்லாவிட்டாலும் பேசு
வதை நிறுத்தமாட்டார்.என் உரையாட
லைக்கேட்க எதிரில் யாரும் வேண்டிய
தில்லை.எதிரிலிருந்தால் அது முழுமை
பெறாது.மெய்ம்மை எனபது என் இருப்பு.
நானே மெய்ம்மைதான்.பிரக்ஞையால்
கண்டுபிடிக்கும் மெய்ம்மை.
இலக்கியப்புகழ் வந்தபோது குழந்தை
மனப்பான்மை பெற்றவரானார் .தன்
இரண்டு மகன்கள் அகால மரணம் எய்தி
யபோதும்,ஒரு மகன் மனநிலைபிறழ்வு.
கடைசியில் இறந்தபோதும் சலனமற்ற
ற மனநிலையில்தான் இருந்தார்.மௌ
னியின் பிறப்புச்சூழல் அவரைவிடவில்
லை என்பர்.பூணூலைக்கழற்றி ஆணி
மில் மாட்டு என்று ‘வ.ரா’சொன்னபோது
I would rather out cocks and put it there
என்று சிரித்தார்.மௌனியின் கதை
கள் புரியவில்லை என்ற பேச்சும் உண்டு.
மௌனியைப் புரிந்துகொள்ள வாசகனு
ம் அந்த மனநிலைக்கு வரவேண்டும்.
மௌனியை வாசிப்பது தனிக்கலை.
அவர் இறப்பதற்குமுன் பேசமுடியாமல்
படுக்கையில் அவதிப்பட்டார்.பேசாத
மௌனியுடன் இருக்க எனக்குப் பிடிக்க
வில்லை.ஆனால் இனிமேல் அவர் பேச
முடியாது.அவரது கதைகள் மட்டுமே
பேசும் என்பார் க.நா.சு.ஆயிரம் குறைகள்
மௌனியிடம் இருப்பது பற்றிப் பேசலாம்.
அவரது இலக்கியம் அமரத்தன்மை வாய்
ந்தது என்பதை மறுக்க முடியாது.மௌனி
அழியாச்சுடர்தான்.
“”
