எல்.ரகோத்தமன்/காத்திருப்பு


 
 
விழாவை சிறப்பிக்க
வரிசையாய்
அகல் விளக்குகள்
ஒரு மெழுகு திரி நுணியின்
ஜ்வாலைக்கு காத்திருக்கின்றன!
 
மெழுகு திரி
ஒரு தீக்குச்சியின்
உரசலுக்காக காத்திருக்கிறது!
 
தீக்குச்சிகள்
தீப்பெட்டிலிருந்து
வெளிவர எஜமான்னின்
உத்தரவுக்கு காத்திருக்கின்றன!
 
எஜமானன் தீப்பெட்டியை
தொலைத்தது தெரியாமல்
அகல், மெழுகு, தீக்குச்சி
எல்லாம் காத்திருக்கின்றன!
 
எஜமானன் எதற்கும்
காத்திருக்க வில்லை!


07-02-2024
 
                                 **