ஹரணி/காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்

காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்
காத்திருக்கும் செய்தித்தாளை வாசிக்க வேண்டும்
வாசிக்க வாசிக்க வன்முறை எல்லாமும்
குடித்த காபி குமட்டும்.

காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்
மருமகள் போடும் முதல் காபி
வீடே மணத்துக் கிடக்கிறது மருமகளால்
கசப்பும் இனிப்பும் வாழ்வு.

காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்
வாசலில் குரல் அம்மா குப்பை
மனைவி எடுத்துப் போகிறாள் காபி
நாளும் மணக்கும் வாழ்வு.