அனங்கன்/ காலையில் குளம்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்

  1. காலையில் குளம்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்

தொலைவானில் கரிச்சான்
பருந்தை விரட்டுகிறது…

பார்வையைமீட்டு குளம்பிக் குவளையைப் பார்க்கிறேன்..

இறந்துகிடக்கும்ஈக்கு இரங்கல் எதுவுமில்லை.

  1. காலையில் குளம்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்.

கவலைகளை மீட்டெடுக்க யாதொரு வழியுமில்லை.

குளம்பியோடு புகைபிடித்தால்
கொஞ்சம் இதமாயிருக்கும்.

ஒவ்வொருநாளும் இப்படித்தான் விடிகிறது.