துளி – 228

02.11.2021

காலையில் திட்டு வாங்கினேன்

அழகியசிங்கர்

இன்று காலையில் எழுந்தவேளை சரியில்லை. ஆனால் ஏமாறவில்லை. இந்த உலகம் முழுவதும் ஏமாற்றுக்கார உலகம் என்று தோன்றுகிறது. அப்படித்தான் இருக்க முடியுமென்றும் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது.

வழக்கம்போல் டெய்லி  விருட்சத்திற்குப் பதிவிடத் தயாராக இருந்தேன்.

ஒவ்வொன்றாய் யோசித்துக்கொண்டிருந்தேன். கவிதைகள்தான் தாங்க முடியாமல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அப்படித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு போன்.

மலையாளம் கலந்த தமிழ். ,

“நான் பிராஞ்ச் மானேஜர். உங்க ஏடிஎம்மைப் பற்றி விசாரிக்கணும்,” என்றார்.

“அதெல்லாம் நீங்க விசாரிக்க வேண்டாம்,” என்றேன் ஜாக்கிரதை உணர்வோடு.

ஏன் என்றால் எந்த வங்கி மானேஜரும் ஏடிஎம் சம்பந்தமாக விசாரிக்க மாட்டார்கள். அவர்களுக்கு நேரமிருக்காது. அவசியமும் இருக்காது. அவர்களுக்கு என்ன கவலை, நான் ஏடிஎம் வைத்துக்கொண்டிருந்தால் என்ன வைத்திருக்காவிட்டால் என்ன.

முன்பு என்னை ஏமாற்றுகிற மாதிரி இப்போதும் ஒரு முயற்சி நடக்கிறது என்று தோன்றியது. டக்குன்னு நான் போனை கட் செய்து விட்டேன். திரும்பவும் அவனிடமிருந்து போன். எடுத்துக் கேட்டேன்.

இந்த முறை அவன் கண்டபடி திட்டித் தீர்த்தான். என்னடா இது இன்று காலையில் தேவையில்லாமல் ஒருத்தனிடம் திட்டு வாங்கினேன் என்று தோன்றியது.

ஆனால் ஏமாறவில்லை. அந்தப் போன் நம்பரை போலீஸ÷டம் கொடுத்து வீர சாகசம் செய்யலாமென்று நினைத்தேன்,

போலீஸ் ஒன்றும் செய்யமாட்டார்களென் று ம் ஜெய் பீம் மாதிரி ஆகிவிடப் போகிறது என்று ம் பேசாமல் இருந்து விட்டேன்.

ஆனால் காலையில் அப்படியொரு திட்டு வாங்கியது வாங்கியதுதான்.

One Comment on “துளி – 228”

  1. “இந்த உலகம் முழுவதும் ஏமாற்றுக்கார உலகம் என்று தோன்றுகிறது” பெருமதிப்பிற்குரிய காலஞ்சென்ற திரு எம் ஆர் அடைக்கலசாமி எனக்குத் தமிழ் வாத்தியார். என் மீது அவருக்கு அலாதி பிரியமும் மதிப்பும் உண்டு. அந்த வயதிலேயே என்னுடன் பல விஷயங்களை விவாதிப்பார். அவர் சொன்ன ஒரு quotable quote “இந்தியாவில் ஏமாறுகிறவன் வெர்ஸஸ் (versus) ஏமாற்றுகிறவன்” (சிவகுமார்)

Comments are closed.