இரு என்பா கவிதைகள்

கு. மா. பா. திருநாவுக்கரசு

என்பா – 76:

ஆனந்தக் கூத்தாடுகிறார் ஆறுபோல் பாயும்
வானமுத மழைநீரில் வாண்டுகள் இங்கே
ஏனென்று கேட்க எவருமில்லை! அபாயம்
தானென்று உணரா பாமரர்.

என்பா – 77:

விழும் மழைவெள்ளம் விரயமாய் போச்சு!
தரும் இயற்கையை தரிசாக்கும் மாசு!
தாய்ப்பால் வறண்வுடன் தவிக்காதோ சிசு!
கால்நடையாய் பால்வார்க்கும் பசு.