டி வி ராதாகிருஷ்ணன்
இதர உதர உவமை

ஒரே பாடலில் உவமேயத்தை உவமானமாகவும், உவமானத்தை உவமேயமாகவும்
தொடர்ச்சியாகக் கூறுவது இதர உதர உவமை ஆகும்.
அதாவது, முதலில் உவமானமும்,உவமேயமுமாகச் சொல்லுதல்.இவ்வாறு சொல்வதன்
நோக்கம், இப்பொருளுக்கு ஒப்புமையாகக் கூடிய மூன்றாவது பொருள் எதுவும்
இல்லையென குறிப்பது ஆகும்
இதர விதுரம் என்ற தொடருக்கு ஒன்றிற்கொன்று எனப் பொருள்
களிக்கும் கயல்போலும் நும்கண்: நும்கண்போல்
களிக்கும் கயலும்: கனிவாய்த் தளிர்க்கொடியீர்:
தாமரைப்போல் மலரும் நும்முகம்:நும்முகம்போல்
தாமரையும் செவ்வி தரும்
தளிரோடு கூடிய கொடி போன்ற நங்கையீர்”கயல் மீன்களைப் போல நும் கண்கள்
களிக்கின்றன.நும் கண்களைப் போலக் கயல் மீன்களும் களிக்கின்றன.தாமரைப்போல
நும் முகம் மலர்ந்துள்ளது.நும் முகம் போல தாமரையும் மலர்ந்து அழகு
தருகின்றது

யார் பாடல் இது?
தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும். காவிய தர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார்