அழகியசிங்கர்/காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்

என்பா கவிதைகள்

அழகியசிங்கர்

  1. காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்
    தினமும் காப்பி குடிப்பது வழக்கம்
    அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது
    நடை பயிற்சி செய்கிறேன்
  2. காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்
    நல்லதா கெட்டதா
    என்று சொல்லுங்கள்
    [09/02, 10:53] Azhagiyasingar: நல்லதில்லை கெட்டது
    என்று சொல்கிறீர்கள்
    என் காதில் ஏறவில்லை
    [09/02, 11:46] Azhagiyasingar: 3. காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்
    என்ன செய்யலாமென்று
    யோசித்துக் கொண்டிருக்கிறேன்
    சும்மா இருக்கலாமென்று இப்போது தோன்றுகிறது
    அப்படி நினைப்பது சரிதான்
    [09/02, 11:53] Azhagiyasingar: 4. காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்
    காப்பி குடித்து முடித்து விட்டேன்
    சும்மா நாற்காலியில்
    உட்கார்ந்து இருக்கிறேன்
    என்ன பண்ணலாமென்று
    யோசிக்கிறேன்
    [09/02, 12:28] Azhagiyasingar: 5. காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்
    ஆனால் டீ குடிக்க விரும்பவில்லை
    டீ குடிக்கும் வழக்கம் இல்லை
    எப்போதும் காப்பி காப்பிதான்