
அழகிய சிங்கரின் என்பா
- கனவுகளை வானில் விண்மீன்களாக்கி அனுப்பினேன்!
உதிரும் நாளுக்காகக் காத்து நின்றேன்!
வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை
கனவுகள் மீண்டுமெனை அழைக்கின்றன! - முயற்சிகள் செய்தால் முடிவுகள் இனிமை!
வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை!
உழைப்பின் பெருமையை உணர்ந்தேன் இன்று!
போராட நானும் துணிந்துவிட்டேன்!
3.வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை
காத்திருக்கும் எனக்கும்
உண்மை புரிவதில்லை
கற்பனைக் கதைகளைக் கேட்டே வளர்ந்ததனால்
வாழ்வின் யதார்த்தம் சுடுகிறது!
