சசிகலா விஸ்வநாதன்/வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை

அழகியசிங்கரின் என்பா
1.
வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை .
மோனத்தில் இருக்கும் முனி
முனிவதில்லை.
புற்றுக்குள் இருக்கும் நாகம் சீறுவதில்லை.
கட்டுக்குள் இருப்பதில்
இடரில்லை

2.
தானே ஓளிர்வதே நட்சத்திரம் அல்லவா!
வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை
ஒளிரும் நட்சத்திரம்
வண்ணங்களின் கேளிக்கை
அதைக் காண்பதே வேடிக்கை

3.
ஒளிரும் ஒளியாக
பால் நிலவு
கருநிலவு தேய்பிறை இறுதியில் மறையும்
வானிவிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை .
அமுதன் நட்சத்திரம் இல்லை.

4.
வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை
கருநிலவும் முழுநிலவும் மாறி மாறி
வந்தாலும் அம்புலி ஒரு நட்சத்திரமா?
வானில் ஒரு தட்டொளி.


  1. வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை .
    ஆதாமும் ஏவாளும் கர்த்தாவால்
    விலக்கப்பட்ட
    கனியை புசித்ததினாலன்றோ;
    மண்ணில் கீழ்மை
    அடைந்து நாணம் அறிந்தனர்.