முருகு/அழகியசிங்கர்…

அரிதாரம் பூசாமல்
அப்படியே எழுதென்பார்…

அதுவே கவிதை – தொடும் அது
அனைவரையும் என்பார்…

நகாசு வேலைகள் பிடிக்காது!
கநாசு மட்டுமே பிடிக்கும்!

நாற்பதாண்டாய் விருட்சத்தை
நவீனமாகவே நடத்தும் வித்தகர்!

கவிதை மை ஈரம்
காய்வதற்குள் அச்சிலேற்றி…

கவிஞன் கண் ஈரம் ரசிக்கும்
கவிதைக் காதலர், காவலர்…

அம்பலக்கூத்தன் அடி முடி தேடிய
அரியும் அந்தப் பிரம்மனும் கூட

இலக்கியத் தேடலில்
இரண்டாம் இடம் தான்!

அழகிய சிங்கருக்கு
அடுத்த இடம் தான்!

பழகிய மாத்திரத்தில்
பதிவார் மனத்தில்…

எழுபதா எனக்கு? என்பார்…
இருபதின் இளமை அழகிய சிங்கர்…

One Comment on “முருகு/அழகியசிங்கர்…”

  1. அவரும் அவரது இலக்கியப் பணியும் மேலும் மேலும் சிறக்க, வளர்க, என்று தைரியமாக வாழ்த்துகின்றேன் என் என்றால் நான் அவரை விட வயதில் மூத்தவர்.

Comments are closed.