அழகியசிங்கர்/ஒரு வரியில் கதை

  1. மடிப்பாக்கத்தில் பெண் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருக்கிறேன்
  2. வெயில் சுள்ளென்று முகத்தில் அடிக்கிறது.
  3. காலை தூக்கம் கலைந்து விட்டது.
  4. இதுவரை இரண்டு காப்பி குடித்து விட்டேன்.
  5. பேரனைப் பார்த்துக் கொள்ள வந்திருக்கிறோம்
  6. எதுவும் எழுதத் தோன்றவில்லை
  7. எழுதாமலிருப்பதே வெற்றி என்று தோன்றுகிறது
  8. ஒவ்வொருவரும் தங்களை விளம்பரப் படுத்திக் கொள்கிறார்கள்
  9. தினமும் ஒரு திருக்குறள் படிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்
  10. உரிய நேரத்தில் புத்தகம் அச்சடித்து வருவதில்லை