
அழகியசிங்கரின் இன்றைய என்பா.
1.
தினமும் தூங்கித் தூங்கி கழிக்கிறோம்.
கனத்த மனதை இளக்கும் செயல்
இன்னெதென்று இனம் காணமல் மனம்
மயங்கித் தயங்கும் மனம்.
2.
தினமும் தூங்கித் தூங்கி கழிக்கிறோம்
தினமும் பனிப் பொழிவு இங்கு
சாலைகளில் வெண்பனி சமுக்காளம் விரிய
என்ன செய்வது என்று அறியாமல்
நானும், அவரும் விழித்தபடி.
3.
தினம் தூங்கித் தூங்கி கழிக்கிறோம்
மருத்துவமனையில் காத்திருக்கிறோம்; அறுவைச் சிகிச்சைக்காக;
நிபுணர்கள் வருகைக்கும் சோதனை அறிக்கைக்கும்.
ஏற்றமும் இறக்கமுமாய் மனநிலை.
4.தினமும் தூங்கித் தூங்கி கழிக்கிறோம்.
என்னதான் செய்ய;
வயோதிகம் வருத்துகிறது
வருவார் மக்கள்
என்ற எதிர்பார்ப்புடன்;
செல்பேசி ஒலிக்கிறது இன்பமாய்.
தினமும் தூங்கித் தூங்கி கழிக்கிறோம்
புத்தி தெளிவுதான்! செயல்பட வழியில்லை
பெரும்பான்மையோர் எண்ணம் எனக்கு இல்லை!
வேறு என்ன செய்வது?
14-2-2024
