
தினமும் தூங்கித் தூங்கிக் கழிக்கிறோம்
என்ற பெயர் எனக்கு இல்லை
தூங்கும் நேரம் மட்டுமே தூங்குகிறேன்
வாழ்வு பயனே எனக்கு.
000
தினமும் தூங்கித் தூங்கிக் கழிக்கிறோம்
சொல்லிப் பழகுதல் நன்று அல்ல
நாளும் வளமுற நிறைய செய்யலாம்
மனமே தீர்வு எதற்கும்.
000
தினமும் தூங்கித் தூங்கிக் கழிக்கிறோம்
எண்ணமும் செயலும் நன்றெனின் தூங்காது
நேரியச் சிந்தனை நாளும் செழிக்கும்
வாழ்தல் வாழ்தல் இனிது.
