இனிக்கும் தமிழ் – 199/டி வி ராதாகிருஷ்ணன்

திருவருட்பா – நான் வஞ்ச நெஞ்சன், நீயுமா ?

எனக்குத் தான் வஞ்ச நெஞ்சம்…உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறேன்,
பொய் சொல்கிறேன், புறம் சொல்கிறேன்…ஆனால் இறைவா இதையெல்லாம் மனதில்
வைத்துக் கொண்டு நீயும் எனக்கு வஞ்சனை செய்தால் நான் என்ன செய்வேன் ?
எங்கு போவேன் ? நீயே சொல்லு.

பாடல்

ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா
நீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே
ஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்
தாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய்.

பொருள்

ஆராய்ந்து பார்த்தால் வஞ்சக நெஞ்சன் அடியேனாகிய நான்.நீயும் வஞ்சக
நெஞ்சன் என்றால் ,இந்த உலகில் அதற்காக இங்கு (நான்) என்ன செய்வேன்..என்ன
செய்வேன்? எல்லாவற்றிற்கும் தாயும், தந்தையும் ஆகி உள் நின்றாய் நீயே
சொல்

                         –